Feb 10, 2025 - 11:38 AM -
0
நிலைபேறான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான தனது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில் SDB வங்கியானது, Institute for Rural Sustainable Development (IRSD) (கிராமிய நிலைபேறான அபிவிருத்தி நிறுவனத்துடன்) ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. கிராமிய சமூகங்களை இலக்காகக் கொண்ட நிலைபேறான தன்மை முயற்சிகளுக்கான ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவதில் முன்னணியில் உள்ள IRSD, நிலைபேறான தன்மைக்கான விரிவான மற்றும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அணுகுமுறை மூலம் கிராமிய இலங்கையை மாற்றமடையச் செய்ய SDB வங்கியுடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளது.
இந்தக் கூட்டாண்மை மூலம், கிராமிய சமூகங்களை மேம்படுத்துவதற்கும் உள்ளீர்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் தமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் ஒரு விரிவான உத்தியை SDB வங்கியும் IRSD யும் செயற்படுத்தும். இந்த முயற்சி கூட்டுறவு மற்றும் நுண், சிறிய, நடுத்தர, தொழில்முயற்சியாளர்கள் (MSME) துறைகள், சமூக அடிப்படையிலான சுற்றுலா, பெண்களை வலுவூட்டல் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தி பிரிவுகளை உள்ளடக்குகின்றது.
SDB வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளருமான, கபில ஆரியரத்ன SDB வங்கியின் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிராமிய சமூகங்களின் தனித்துவமான தேவைகளை நிவர்த்தி செய்து, அதன் மூலம் நிலைபேறான வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலம், நிலைபேறான வளர்ச்சியை ஆதரிக்கின்ற வங்கியின் பரந்த தூரநோக்குடன் இந்தக் கூட்டாண்மை முழுமையாக ஒத்துப்போகிறது. IRSD உடனான ஒத்துழைப்பானது எமது நிபுணத்துவ அறிவை வலுப்படுத்துவதோடு, இந்த சமூகங்களின் பயன்படுத்தப்படாத மனிதவள, சமூக, பொருளாதார திறனை உணர்வதற்கான எமது பணி நோக்கிற்காக எமக்கு உதவுகிறது.
இணைந்து செயற்படுவதன் மூலம், கிராமிய பொருளாதாரங்களை மாற்றியமைப்பதையும், சக இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.
இந்த திட்டத்தின் கீழ், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதிலும், கிராமிய சமூகங்களின் சமூக, பொருளாதார மற்றும் மனித மேம்பாட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதிலும் SDB வங்கி முக்கிய பங்கு வகிக்கும். மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கருத்தில் கொண்ட, கூட்டுறவுத் துறையானது கிராமிய முன்னேற்றத்தின் முக்கிய இயக்கிகளாகச் செயற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, MSME துறை அபிவிருத்தி தொடர்பான இந்த திட்டத்தின் கவனமானது வேலைவாய்ப்பு உருவாக்கத்தைத் தூண்டுவதோடு, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, மீள்தன்மையை மேம்படுத்தும். நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களை ஆதரிப்பதன் மூலம், நிலைபேறான கிராமிய வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை நிறுவுவதை இக்கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக அடிப்படையிலான சுற்றுலாவில் நிபுணத்துவம் பெற்ற IRSD ஆனது, இந்த அறிவைக் கொண்டு, இலக்கு வைக்கப்பட்ட பிராந்தியங்களின் தனித்துவமான கலாசார ரீதியான மற்றும் இயற்கை சார்ந்த வளங்களைப் பயன்படுத்தும். இந்த அணுகுமுறையானது, உள்ளூர் சமூகங்கள் தங்களது பாரம்பரியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க உதவுகின்ற அதே வேளையில் புதிய வருமான வாய்ப்புகளையும் உருவாக்கும். அது மாத்திரமன்றி இந்த கூட்டாண்மை மூலம், பசுமை விவசாயம், தொழில்முனைவு மற்றும் வணிக முகாமைத்துவத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களை வலுவூட்டுவதற்கான அதன் உறுதிப்பாட்டை SDB வங்கி மேலும் அதிகரிக்கும்.
நிலைபேறான மற்றும் உள்ளீர்க்கப்ட்ட கிராமிய அபிவிருத்தியை முன்னெடுப்பதில் பெண்கள் கொண்டுள்ள முக்கிய பங்களிப்பை இந்த முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகிறது. SDB வங்கி அதன் தொடக்கத்திலிருந்தே, அடித்தள மட்டத்தில் நீண்டகால வளர்ச்சி மற்றும் செழிப்பை வளர்ப்பதற்காக கொண்டுள்ள அதன் அர்ப்பணிப்பு காரணமாக, மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றுள்ளது. தனது எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக தொடர்ச்சியாக புத்தாக்கம் மிக்க விடயங்களை உருவாக்கி வரும் இவ்வங்கி, கிராமிய வளர்ச்சிக்கான ஒரு ஊக்கியாக அதன் பங்கை உறுதிப்படுத்தி வருகின்றது. IRSD போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம், கிராமிய சமூகங்களின் வாழ்க்கையில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தும் அதன் நோக்கத்தை SDB வங்கி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஒத்துழைப்பானது, மாற்றத்தை உறுதியளிப்பதோடு மட்டுமல்லாமல், நிலைபேறான வளர்ச்சியில் எதிர்கால முயற்சிகளுக்கான ஒரு அளவுகோலையும் அமைக்கிறது.
SDB வங்கி பற்றி:
ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கும் ஏற்ப வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, விரிவான ஆதரவை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட எதிர்காலத்துடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ள SDB வங்கியானது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் பட்டியலிடப்பட்டுள்ளதும் BB+(lka) பிட்ச் மதிப்பீட்டைக் கொண்ட இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற விசேட வங்கியாகும். நாடளாவிய ரீதியில் உள்ள 94 கிளை வலையமைப்பின் ஊடாக நாடு முழுவதும் உள்ள அதன் சில்லறை வணிக சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை SDB வங்கி வழங்குகிறது. SDB வங்கியின் நெறிமுறைகளில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை ஆகிய ESG கொள்கைகள் ஆழமாகப் பதிந்துள்ளதோடு நிலைபேறான நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதில் உறுதியான கவனத்தை அது செலுத்துகிறது. பெண்களை வலுவூட்டல் மற்றும் டிஜிட்டல் உள்ளீர்ப்பை ஊக்குவிப்பதில் முக்கியமான அர்ப்பணிப்பையும் வங்கி கொண்டுள்ளது.

