செய்திகள்
இன்று மற்றும் நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Feb 11, 2025 - 08:48 AM -

0

இன்று மற்றும் நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெர இன்று (11) மற்றும் நாளை (12) இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை வீதி உலா வர உள்ள நிலையில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 

பெரஹெர விகாரையில் ஆரம்பமாகி ஜினரத்தன மாவத்தை வழியாகச் சென்று, ஹுனுபிட்டிய வெவ வீதிக்கு திரும்பி, ராமநாயக்க மாவத்தை சந்திக்கு வந்து, ராமநாயக்க மாவத்தை வழியாக ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தி வரை பயணித்து, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக அல்ட்ரயார் அவென்யூ சந்திப்பில்  வலதுபுறம் திரும்பி, அல்ட்ரயார் அவென்யூ வழியாக ஸ்டேபிள் தெரு சந்தி வரை பயணித்து, வலதுபுறம் திரும்பி ஸ்டேபிள் தெரு, பேப்ரூக் பிளேஸ், பேப்ரூக் சுற்றுவட்டம், ஜினரத்தன மாவத்தை வழியாக கங்காராம விகாரையை வந்தடையவுள்ளது.

 

இதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் மேற்படி வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05