Header Logo

கிழக்கு
பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு 20,000 ரூபா அபராதம்

Feb 11, 2025 - 10:56 AM -

0

பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு 20,000 ரூபா அபராதம்

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்கு 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலை உரிய சுகாதார விதிமுறைகளுக்கு அமைய காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாடுக்கு அமைய நேற்று (10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். 

இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராக சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title