வடக்கு
கடைத்தொகுதியில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு

Feb 11, 2025 - 11:35 AM -

0

கடைத்தொகுதியில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா, பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (11) காலை மீட்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், பசார் வீதியில் அமைந்துள்ள நகைப் பட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்று (10) இரவு வீட்டிலிருந்து தொழில் நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார்.


இந்த நிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது.


சம்பவத்தில் சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சுப்பையா ஆனந்தன் என்ற குடும்பஸ்தர் ஒருவரே மரணமடைந்துள்ளார்.


அவர் மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05