Feb 11, 2025 - 12:27 PM -
0
உடல் எடையை குறைப்பதற்காக சைவத்துக்கு மாறிவிட்டார் அஜித். 'விடா முயற்சி' திரைப்படத்துக்கு பிறகு 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் திகதி வௌியாகிறது. இந்நிலையில் தற்போது கார் ரேஸில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஒக்டோபர் மாதம் வரை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் பங்கேற்க இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் போர்த்துகலில் நடைபெறும் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகிறார். இதற்காக தனது உடல் எடையை அஜித் கணிசமாக குறைத்திருக்கிறார். அவர் முழுமையாக சைவத்துக்கு மாறியுள்ளதாகவும் இதன் மூலம் அவர் எடையை குறைப்பதில் தீவிரம் காட்ட முடிந்ததாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விடா முயற்சி படத்தில் அஜித்துடன் நடித்த ஆரவ், 'அஜித் சார் சைவத்துக்கு மாறிவிட்டார். இதை அவரே என்னிடம் தெரிவித்தார். இதன் மூலம் நல்ல ரிசல்ட் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்' என்றார்.