Feb 11, 2025 - 02:38 PM -
0
இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் உள்நாட்டு காப்புறுதித் துறையில் புகழ் பெற்ற மிகப்பாரிய திட்டமான ஷஷஃபெமிலி சவாரி மெகா ஊக்குவிப்பு திட்டத்தின் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்களை கொண்ட குழுனர் 2025 ஆம் ஆண்டில் உற்சாகமான பயண அனுபவங்களை பெறவுள்ளனர்.
செலிங்கோ லைஃப் ஃபெமிலி சவாரியின் 18வது திட்ட நிகழ்வின் பிரமாண்டமான அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் 5 காப்புறுதிதாரர் குடும்பங்கள் சீனாவில் அனைத்து செலவினங்களுடனும் விடுமுறையை அனுபவிக்கும் வாய்ப்பினையும், மேலும் 10 காப்புறுதிதாரர் குடும்பங்கள் இதே போன்று மலேசியாவில் விடுமுறையை கழிக்கும் வாய்ப்பினையும் மற்றும் பேர்ல் பே தீம் பூங்காவில் 250 குடும்பங்கள் மகிழ்ச்சியாக ஒரு தினத்தை கழிக்கும் வாய்ப்பினையும் பெற தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் சீனாவில் விடுமுறையை கழிப்பதற்கான தெரிவு செய்யப்பட்ட ஐந்து அதிர்ஷ்டசாலி செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர் குடும்பங்கள் பிலியந்தலை, கொழும்பு வடக்கு, மட்டக்களப்பு மற்றும் அம்பலாங்கொடையைச் சேர்ந்தவர்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் இரு வெற்றியாளர்கள் அம்பலாங்கொடையில் இருந்து தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குலுக்கல் முடிவடைந்த இத்தருணத்தில் வெளிநாட்டு சுற்றுலா மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணங்களுக்கான ஏற்பாடுகள் தொடங்கவுள்ளன. இதேவேளை செலிங்கோ லைஃப்பின் இந்த மெகா ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் காப்புறுதிதாரர் சமூகத்தின் 1060 பேர் பயனடையவுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் இன்றுவரை, இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 36,000 க்கும் அதிகமானோர் ஃபெமிலி சவாரி அனுபவத்தை பெற்றுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், கொவிட்-19 தொற்று, சர்வதேச பயணத் தடைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல சவால்கள் இருந்தபோதிலும் ஃபெமிலி சவாரி நிகழ்ச்சி திட்டமானது ஆரம்பம் முதல் இடையூறுகள் இன்றி எவ்வாறு தொடர்ந்தது என்பதை செலிங்கோ லைஃப்பின் பிரதி பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு.சமிதா ஹேமச்சந்திர நினைவுகூர்ந்தார். ஃபெமிலி சவாரி, காப்புறுதிதாரர்களிடையே பகிர்ந்த அனுபவங்களின் மூலம் உறவுகளை கட்டியெழுப்ப உதவியது, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிட உதவியதுடன் மேலும் செலிங்கோ லைஃப் வர்த்தகநாமத்தை கட்டியெழுப்ப வழிவகுத்தது என்றார்.
தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 20 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.

