Feb 11, 2025 - 02:40 PM -
0
இந்தியாவின் முன்னணி மசகெண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் பெற்றோலிய கூட்டுத்தாபன நிறுவனத்தின் (HCPL) ஒரு அங்கமான HP லூப்ரிகன்ட்ஸ் ஆனது சீ வேர்ல்ட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் உடன் இணைந்து முறையாக இலங்கையில் தடம் பதித்ததை அடுத்து இலங்கையின் மசகு எண்ணெய் சந்தை கணிசமாக வலுவடைந்துள்ளது.
இலங்கை - இந்திய வர்த்தக உறவுகளை ஒரு முக்கியமான துறையில் முன்னேற்றும் இந்த அற்புதமான அபிவிருத்தியானது கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பொருத்தமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர்.சத்யஞ்சல் பாண்டே கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வினில் HPCL இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் திரு அமித்கார்க் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளான HPCL இன் மசகெண்ணை வர்த்தக அலகின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. ஸ்ரீநிவாஸ் மற்றும் HPCL இன் சர்வதேச விற்பனைகள் பொது முகாமையாளர் திரு ஷங்கர் ஜெகநாதன் Carplan Lubricants இன் தலைவர் திரு மஹேன் தம்பையா, முகாமைத்துவ பணிப்பாளர் திரு. அன்ட்ரூ பெரேரா மற்றும் அவர்களது குழுவினருடன் கலந்து கொண்டனர்.
HP லூப்ரிகன்ட்ஸின் இலங்கை உரிமையாளரான Sea World Lanka (Pvt) Ltd. இன் விற்பனை விநியோகஸ்தரான, Carplan Lubricants ஆனது, புகழ்பெற்ற வாகன எண்ணெய்கள், தொழில்துறை எண்ணெய்கள் மற்றும் கடல் எண்ணெய்கள் போன்ற பிரத்தியேக தயாரிப்புகளை உள்ளடக்கிய விரிவான தயாரிப்புகளை வழங்குவதுடன் சிறப்புத் தயாரிப்புகள் மற்றும் கிரீஸ்கள், சந்தையில் தரம் மற்றும் தெரிவை கணிசமாக அதிகரிக்கின்றன மற்றும் உள்நாட்டு வாகன உதிரிப்பாகங்களை பொருத்தும் துறையில் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
வாகன எண்ணெய்கள் பிரிவில், உற்பத்தி வரிசையானது டீசல் மற்றும் பெற்றோல் என்ஜின்களுக்கான, ஹைப்ரிட் என்ஜின்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான உயர் செயல்திறனுடைய SLS சான்றளிக்கப்பட்ட பன்முக தர எண்ணெய்கள் அடங்கும்; மேலும் தானியங்கி கியர் எண்ணெய்கள். இரயில் எண்ணெய்கள், பிரேக் எண்ணெய்கள், மின்சார வாகனம் இணக்கமான எண்ணெய்கள் மற்றும் கிரீஸ்கள் மற்றும் டிராக்டர் எண்ணெய்கள் ஆகியவையும் உள்ளடக்கப்படுகின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், HP Lubricants ஆனது Mercedes Benz, Rolls Royce, Porsche, Volvo, VW, Renault, Mack, CAT மற்றும் Ashok Leyland போன்ற புகழ்பெற்ற உலகளாவிய வாகன வர்த்தக நாமங்களின் OEM அனுமதிகளைப் பெற்றுள்ளது. மற்ற OEM களில் JCB, Bajaj, Royal Enfield,MRF மற்றும் BOSCH ஆகியவற்றுக்கு HP முன்னணி விநியோகஸ்தராக திகழ்கிறது.
அனைத்து HP லூப்ரிகண்ட்ஸ் தயாரிப்புகளும் சிறந்த எஞ்சின் பாதுகாப்பு, எரிபொருள் திறன், பரந்த இணக்கத்தன்மை மற்றும் தீவிர சூழ்நிலைகளில் அதிக செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதற்காக பொருத்தமானவகையில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
விநியோகத்திற்காக, மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை உள்ளடக்கிய விநியோகஸ்தர்களை Sea World Lanka ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதுடன் மேலும் மற்றைய மாகாணங்களுக்கு விரைவில் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

