செய்திகள்
மக்கள் பார்வைக்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகள்!

Feb 11, 2025 - 02:48 PM -

0

மக்கள் பார்வைக்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகள்!

தேசிய விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இலங்கை உயிரியல் பூங்காக்களில் கண்காட்சிக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஒரு ஜோடி பழுப்பு கரடிகள், ஒரு ஜோடி கழுதைப்புலிகள் மற்றும் மூன்று ஜோடி பாலைவனக் கீரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

குறித்த விலங்குகள் நேற்று (10) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. 

கழுதைப்புலிகள் ரிதீகம சஃபாரி பூங்காவிற்கும், மற்ற விலங்குகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கும் ஒரு மாத தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு, குறித்த விலங்குகள் பொது காட்சிக்கு வைக்கப்படும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05