சினிமா
'மிஷன் இம்பாசிபிள் 8' படத்தின் டீசர் வெளியானது

Feb 11, 2025 - 04:17 PM -

0

'மிஷன் இம்பாசிபிள் 8' படத்தின் டீசர் வெளியானது

சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன்முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. 

கடந்த வருடம் ஜூலை மாதம் இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. 

இந்நிலையில், மிஷன் இம்பாஸிபிள் 8ஆம் பாகத்திற்கான புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளார். 

இப்படம் மே மாதம் 23ஆம் திகதி வெளியாகவுள்ளது. முந்தைய பாகத்தில் ஒரு சாவியை தேடி அவர் பயணம் செய்வார். இந்த பாகமும் அதை தேடியே கதைக்களம் அமைந்துள்ளது.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05