Feb 11, 2025 - 05:11 PM -
0
கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.
இத்திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் பூஜை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் முன்னிலையில் இன்று (11) நடைபெற்றது.