சினிமா
தனுஷ் உடன் போட்டியா என்ற கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதில்

Feb 11, 2025 - 06:01 PM -

0

தனுஷ் உடன் போட்டியா என்ற கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதில்

பெப்ரவரி 21ஆம் திகதி தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்த இரண்டு படங்களின் ட்ரெய்லருக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த இரண்டு படங்களின் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 

சென்னையில் 'டிராகன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதீப் ரங்கநாதனிடம் தனுஷ் உடன் போட்டியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "போட்டி எல்லாம் இல்லை. அந்த மாதிரி தேதிகள் அமைந்து விட்டன. பெப்ரவரி 14ஆம் திகதி வெளியிடுவதாக இருந்தோம். ஆனால், விடாமுயற்சி வெளியீட்டால் நல்ல திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே 21ஆம் திகதி வெளியீட்டுக்கு மாற்றினோம். அதே காரணத்திற்காகவே 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படக்குழுவினரும் மாற்றியிருப்பார்கள் என நினைக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார். 

மேலும், எப்போது மீண்டும் படம் இயக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு "இப்போதைக்கு 3 படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவை முடியும்போது என்ன தோன்றுகிறதோ அதை செய்வேன். ஐடி கம்பெனி வேலை, குறும்படங்கள் இயக்கம், பட இயக்கம், நடிப்பு என தோன்றுவதை செய்து கொண்டிருக்கிறேன். படங்களும் அவ்வப்போது இயக்குவேன். கதை எழுதுவதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

Comments
0

MOST READ
01
02
03
04
05