Feb 11, 2025 - 09:01 PM -
0
இலங்கை பொலிசில் தற்போது வரை செயல்பாட்டிலிருந்த நிர்வாக கட்டமைப்பு சில பதவிநிலைகள், நியமனங்கள் மற்றும் விசாரணை அலகுகளை திருத்தியமைத்து பொலிஸ் கட்டளைச் சட்டத்திலுள்ள சட்ட விதிகளுக்கமைவாக இலங்கை பொலிசின் புதிய நிர்வாக கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பொலிசாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் சகல குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் ஏனைய விசாரணைகளும், சம்பவங்களுக்கு ஏற்புடையவாறு மிகக் குறுகிய காலத்தில் முடித்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வழக்கு தாக்கல் செய்து விரைவாகவும் திறமையான முறையிலும் முன்னெடுத்துச் செல்வது இந் நிர்வாக கட்டமைப்பின் பிரதான நோக்கமாகும்.
அதற்கமைய, பின்வரும் புதிய பதவிநிலைகள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையின் கீழ் இருந்த குற்ற விசாரணைத் திணைக்களமானது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், குற்ற விசாரணை மற்றும் நிதிக் குற்ற விசாரணை எனத் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.