வடக்கு
பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Feb 12, 2025 - 11:12 AM -

0

பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (11) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி நடந்து சென்ற ஒருவரை அதே திசையில் வந்த தனியார் பேருந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பரந்தன் காஞ்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05