Feb 12, 2025 - 11:45 AM -
0
கடந்த ஜனவரி 29ஆம் திகதி சீனாவில் வௌியான அனிமேஷன் படம், ‘நே ஜா 2’. இந்தப் படம் 16ஆம் நூற்றாண்டில், வெளியான சீன நாவலான ‘இன்வெஸ்டிச்சர் ஆஃப் தி காட்ஸ்’ என்ற நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஜியாஸ் திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இதுவரை சீனா பாக்ஸ் ஆபீஸில் மட்டுமே இந்திய மதிப்பில் ரூ. 9,544 கோடிகள் வசூல் குவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு வௌியான படங்களில் அதிக வசூல் குவித்த படமாக இந்தப் படம் மாறியுள்ளது. மேலும் ஆங்கிலம் இல்லாத படங்களில் அதிக வசூல் குவித்த படமாகவும் இந்தப் படம் சாதனை படைத்துள்ளது.
மேலும் சீன திரைப்பட வரலாற்றில் அதிகம் வசூலித்த படமாகவும் அமைந்திருக்கிறது. இப்படம் வெளியாகி 12 ஆவது நாளில் இந்த சாதனையைப் படைத்துள்ளது. படத்திற்கு வார நாட்கள் வார இறுதி நாட்கள் என எல்லா நாட்களிலும் வசூல் குறையாமல் இருந்து வருகிறது.
இந்த ரூ.9,544 கோடி வசூல் மூலம் உலக அளவில் அதிகம் வசூல் செய்த முதல் 40 படங்களில் ‘நே ஜா 2’ இடம் பெற்றுள்ளது. மேலும் கொரோனா காலத்திற்குப் பின்னர் உலக அளவில் அதிகம் வசூல் செய்த 8ஆவது படமாகவும் ‘நே ஜா 2’ இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை சீனாவில் மட்டும் 159.7 மில்லியனுக்கும் அதிகமானோர் 12 நாட்களில் பார்த்துள்ளனர். இந்தப் படத்தை 80 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து உருவாக்கியுள்ளனர்.