Feb 12, 2025 - 11:59 AM -
0
உலகளவில் இந்திய மதிப்பில் 1,800 கோடி ரூபாவுக்கும் மேல் 'புஷ்பா 2' படம் வசூல் செய்துள்ளது.
ஆனால், மலையாளத்தில் இப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2' படத்திற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் பங்கேற்ற விநியோகஸ்தர்கள் கேரளாவில் புஷ்பா 2 படுதோல்வியடைந்து குறித்து கருத்து தெரிவித்தனர்.
இதில் 'புஷ்பா 2' படத்திற்கு முதல் நாளில் கேரளாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததாவும், அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு கூட கிடைக்காத அளவுக்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்ததாகவும் கூறினர்.
ஆனாலும், 'புஷ்பா 2' ஒரு வழக்கமான மலையாள பாணியில் உருவான படம் அல்ல. மலையாள சினிமா இப்போது பக்குவம் அடைந்து வருகிறது. ரசிகர்களும் லாஜிக் ஓட்டைகள் இருந்தால் அந்த படங்களை புறக்கணிக்கிறார்கள். 'புஷ்பா' முதல் பாகம் லாஜிக்குடன் இருந்தது. 'புஷ்பா 2'வில் நிறைய லாஜிக் தவறுகள் இருந்தன. அதனாலேயே கேரளா ரசிகர்களை இப்படம் கவரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.