Feb 12, 2025 - 01:31 PM -
0
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (12) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.
அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சார்பில் அதன் தலைவர் சரித் அசலங்க தனது நான்காவது ஒருநாள் சதத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறிய நிலையில், சரித் அசலங்க 03 ஆறு ஓட்டங்கள், 11 நான்கு ஓட்டங்கள் அடங்களாக இந்த சதத்தை பெற்றுள்ளார்.
இதன்படி இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 43.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுள்ளது.