Feb 12, 2025 - 02:33 PM -
0
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் முன்பாக இன்று (12) காலை பெற்றோர்கள் சிலர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
எமது பாடசாலையின் வளர்ச்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்யும் அதிபரை எமது பாடசாலையில் இருந்து வெளியேற்றக் கோரி பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் வருகைதந்து பெற்றுக்கொண்டு உரிய தரப்பினர்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்திருந்தார்.
அத்தோடு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கான மகஜரை தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் வருகை தந்து பெற்றுக் கொண்டிருந்தார்
குறித்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக அல்லது மாகாண கல்வித் திணைக்களம் முன்பாக தாங்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.
--