Feb 12, 2025 - 03:48 PM -
0
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல 02 தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபருக்கு வழங்கப்பட்ட விடுதியினை உடைத்து விடுதியில் இருந்த மடிக் கணினி, தங்க ஆபரணங்கள் மற்றும் குறித்த பாடசாலையில் பாவனைக்கு வைக்கப்படிருந்த எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை திருடிய மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கைதானவர்கள் தாய், தந்தை மற்றும் 15 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவனை சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு ஒப்படைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (12) ஹட்டன் நீதவான் முன்னிலையில் முனிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல 02 தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபரின் விடுதியினை உடைத்து விடுதியில் இருந்த மடிக்கணினி, தங்க ஆபரணங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் என்பன திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று (11) சந்தேகநர்கள் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைவிடுமுறை வழங்கப்பட்ட காலப்பகுதியில் குறித்த பாடசாலையின் பிரதி அதிபரின் விடுதியினை உடைத்து குறித்த மூவரும் திருட்டு சம்பவத்தை நடத்தியுள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொகவந்தலாவ பொலிஸார் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட போதே குறித்த வீட்டில் இருந்து மடிக்கணினி மற்றும் தங்க ஆபரணங்கள், எரிவாயு சிலிண்டர் என்பன மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--