செய்திகள்
பாணந்துறை கடலில் அடித்துச் செல்லப்பட்ட 13 பேர்

Feb 12, 2025 - 10:07 PM -

0

பாணந்துறை கடலில் அடித்துச் செல்லப்பட்ட 13 பேர்

பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்த 13 பேர் இன்று (12) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. 

இருப்பினும், ஒரு இளைஞன் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

காணாமல் போனவர் பாணந்துறை, கெசல்வத்த, கெமுனு மாவத்தையில் வசிக்கும் 18 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

காணாமல் போன இளைஞர், பாணந்துறை கடலில் மூழ்கிய பழைய கப்பலின் இடதுபுறத்தில் தனது மூத்த சகோதரர் மற்றும் மூன்று நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்தார். 

அவர்களுடன் எம்பிலிப்பிட்டியாவைச் சேர்ந்த 8 பேரும் இருந்தனர். 

ஆனால், திடீரென்று அவர்கள் ஒரு அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். 

உதவிக்கான அவர்களின் கூக்குரலுக்கு அமைய செயற்பட்ட கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகள் 12 பேரை மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட அனைவரும் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று கடல் கொந்தளிப்பாக இருப்பதால், சிவப்புக் கொடிகள் காட்டப்பட்டதாகவும், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

மீட்புப் பணியில் ஈடுபட்ட உயிர்காப்பாளர்களும் மூழ்கியிருந்த கப்பலில் மோதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05