வணிகம்
சிக்கன விலையில் உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை நிறுவ அதானி நிறுவனம் Mayo Clinic உடன் இணையவுள்ளது

Feb 13, 2025 - 12:14 PM -

0

சிக்கன விலையில் உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை நிறுவ அதானி நிறுவனம் Mayo Clinic உடன் இணையவுள்ளது

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களை கொண்ட அதானி சுகாதார நகரத்தை (Adani Health City - AHC) தொடங்குவதாக அறிவித்துள்ளார். இது குழுமத்தின் இலாப நோக்கற்ற சுகாதாரப் பிரிவின் மூலம் செயற்படுத்தப்படும். 

सेवा साधना है, सेवा प्रार्थना है और सेवा ही परमात्मा है என்ற கௌதம் அதானியின் சமூக கொள்கைக்கு இணங்க, இந்தியா முழுவதும் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் சிக்கன விலையில், உலகத் தரம் வாய்ந்த மருத்துவப் பராமரிப்பு மற்றும் மருத்துவக் கல்வியை கொண்டுவருவதற்கான செலவை அதானி குடும்பம் முழுமையாக பொறுப்பேற்கவுள்ளது. அகமதாபாத் மற்றும் மும்பையில் இந்த ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களில் முதல் இரண்டை கட்டுவதற்கு அந்தக் குடும்பம் INR 6,000 கோடிக்கு மேல் நன்கொடை அளிக்கும். இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் மேலும் இது போன்ற ஒருங்கிணைந்த அதானி சுகாதார நகரங்களை உருவாக்க கௌதம் அதானி திட்டமிட்டுள்ளார். 

இந்த ஒருங்கிணைந்த AHC வளாகங்கள் ஒவ்வொன்றும் 1,000 படுக்கைகள் கொண்ட மல்டி -சூப்பர்-சிறப்பு மருத்துவமனைகள், வருடாந்தம் 150 இளங்கலை மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் மருத்துவக் கல்லூரிகள், 80+ வதிவிட வைத்தியர்கள் மற்றும் 40+ சிறப்பு வைத்தியர்கள், படிநிலை மற்றும் இடைநிலை பராமரிப்பு வசதிகள் மற்றும் அதிநவீன ஆராய்ச்சி வசதிகளை கொண்டிருக்கும். AHC மருத்துவ சுற்றுச்சூழல் அமைப்பு, அனைத்து சமூக- பொருளாதார பின்னணியிலுள்ள மக்களுக்கு சேவை செய்வதையும், அடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதையும், மருத்துவ ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரி மருத்துவ தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும். 

இந்த நிறுவனங்களின், நிறுவன நோக்கங்கள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் குறித்த மூலோபாய ஆலோசனைகளை வழங்குவதற்காக அதானி குழுமம் அமெரிக்காவின் Mayo Clinic Global Consulting (Mayo Clinic) உடன் கைகோர்த்துள்ளது. டிஜிட்டல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத் தர மேம்பாட்டில் கவனம் செலுத்துவதுடன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு குறித்த நிபுணத்துவ வழிகாட்டுதலையும் மயோ கிளினிக் வழங்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது 60ஆவது பிறந்தநாள் பரிசாக, சுகாதாரம், கல்வி மற்றும் திறன் விருத்தியை மேம்படுத்துவதற்காக எனது குடும்பத்தினர் INR 60,000 கோடி ரூபாயை வழங்கினர். என்று அதானி குழுமத்தின் தலைவர் திரு.கௌதம் அதானி கூறினார். இந்த பங்களிப்பிலிருந்து முன்னெடுக்கவுள்ள பல பெரிய திட்டங்களில் அதானி சுகாதார நகரத்தின் வளர்ச்சி முதன்மையானது. இது இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களுக்கும் சிக்கன விலையில், உலகத் தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் முக்கிய இடம் வகிக்கும். 

உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த இலாப நோக்கற்ற மருத்துவக் குழு பயிற்சி நிறுவனமான மயோ கிளினிக் உடனான எங்கள் இணைவு, சிக்கலான நோய் பராமரிப்பு மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து இந்தியாவின் சுகாதாரத் தரத்தை உயர்த்த உதவும் என்று நான் நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார். மயோ கிளினிக் அதன் நிபுணத்துவத்தை சுயாதீன சுகாதார வழங்குநர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு விரிவுபடுத்துகிறது. மயோ கிளினிக் திட்டம், வாடிக்கையாளர்கள் தங்கள் இலக்குகளை அடைய உதவும் வகையில் சரியான நிபுணர்களிடமிருந்து சரியான பதில்களை பெற உதவும் வகையில் தீர்வுகளை வடிவமைப்பதன் மூலம் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையை வழங்குகிறது. 

அதானி குழுமம் தொடர்பாக 

இந்தியாவின் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அதானி குழுமம், இந்தியாவில் பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். இது logistics (துறைமுகங்கள், விமான நிலையங்கள், logistics, கப்பல் மற்றும் புகையிரதம்), வளங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிவாயு மற்றும் உட்கட்டமைப்பு, வேளாண் (பொருட்கள், சமையல் எண்ணெய், உணவுப் பொருட்கள், குளிர்பதன சேமிப்பு மற்றும் தானிய களஞ்சியங்கள்), Real Estate, பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பு, நுகர்வோர் நிதி மற்றும் பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் விஸ்தரித்துள்ளது. அதானி நிறுவனம் தனது வெற்றிக்கும் தலைமைத்துவத்திற்கும், நிலையான வளர்ச்சிக்கான வழிகாட்டும் கொள்கையான 'தேசத்தைக் கட்டியெழுப்புதல்' மற்றும் 'நன்மையுடனான வளர்ச்சி' ஆகிய கொள்கைகளே காரணம் என நம்புகிறது. நிலைத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் பகிரப்பட்ட பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பெற்ற அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் குழு உறுதிபூண்டுள்ளது. 

மேலதிக தகவல்களிற்கு www.adani.comஐ நாடவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05