Feb 13, 2025 - 12:25 PM -
0
கொமர்ஷல் வங்கியின் மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள், அவர்களுக்கென பிரத்தியேகமாக விசா சிக்னேச்சர் எலீட் (Elite) டெபிட் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் முன்னுதாரணமான புதிய சேவை மற்றும் வசதிகளை அனுபவிக்க உள்ளனர்.
இலக்கம் 7, ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தை, (கிரகரிஸ் வீதி) கொழும்பு 7 இல் உள்ள வங்கியின் எலீட் (Elite) வங்கிக் கிளையின் மறுசீரமைப்புடன் இணைந்ததான, விசா சிக்னேச்சர் எலீட் டெபிட் அட்டை அறிமுகமானது, கொமர்ஷல் வங்கியின் கோல்ட் டெபிட் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கியின் புதிய டெபிட் அட்டை வழங்கும் சலுகைகளை பெற வழிவகுக்கவுள்ளது.
இந்த மேம்படுத்தல் நடவடிக்கையானது பிரத்தியேக சலுகைகளில் புதிய தரநிலையை அமைக்கும் செறிவூட்டப்பட்ட முதற்தர சேவைகளுக்கான அணுகலை இந்த வாடிக்கையாளர் பிரிவினருக்கு வழங்கும் என வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் முழு கிளை வலையமைப்பிலும் முன்னுரிமை சேவைக்கான உரிமையைத் தவிர, புதிய அட்டைதாரர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தின் போது ஒப்பிடமுடியாத வசதி மற்றும் சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இதற்கிணங்க உலகெங்கிலும் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட விமான நிலைய ஓய்வறைகளில் இலவச அணுகல் மற்றும் இலவச பயணக் காப்புறுதி என்பன வழங்கப்படவுள்ளன. வெகுமதி புள்ளிகளை விரைவாகக் குவிக்கும் வகையில், செலவழித்த ஒவ்வொரு ரூ. 400 க்கும் 1 புள்ளி என்ற விகிதத்தில் அதிகபட்ச வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும்.
புதிய விசா சிக்னேச்சர் எலீட் டெபிட் அட்டை அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு சனத் மனதுங்க, எமது டெபிட் அட்டை வரிசையில் இது மேலதிகமான முதற்தர கட்டண வசதியை வழங்குவதாக இருக்கும். இது எங்கள் உயர் நிகர மதிப்புள்ள வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டையானது எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கான கொமர்ஷல் வங்கியின் அர்ப்பணிப்பை பிர திபலிப்பதாக அமைந்துள்ளது. நிலையான வைப்பு, சேமிப்பு, திறைசேரி கணக்குகள் அல்லது கொமர்ஷல் வங்கியில் சமமான வெளிநாட்டு நாணய வைப்புகளில் குறிப்பிட்ட மொத்த வைப்புத் தொடர்புகளைக் கொண்ட நபர்கள் எலீட் வாடிக்கையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, வங்கியின் எலீட் கிளையிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கிளைகளிலும் சிறப்பு அங்கீகாரத்தைப் பெறுகிறார்கள். நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கிளை வலையமைப்பின் வாடிக்கையாளர்களுக்கும் எலீட் அந்தஸ்து வழங்கப்படுகிறது. புதிய விசா சிக்னேச்சர் எலீட் டெபிட் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரத்தியேக புதிய அட்டையின் பலன்களை அதிகப்படுத்த எலீட் வங்கிக் கிளையில் விசேட வங்கி அதிகாரிகள் இருப்பார்கள் என்று வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100மூ கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

