விளையாட்டு
புதிய அணிதலைவர் அறிவிப்பு

Feb 13, 2025 - 12:52 PM -

0

புதிய அணிதலைவர் அறிவிப்பு

10 அணிகள் பங்கேற்கும் 18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது.

 

சில சீசன்களாக ஆர்சிபி அணியின் அணி தலைவராக செயல்பட்ட டூ பிளெஸ்சிசை கழற்றி விட்டது. அவரை நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை.

 

எனவே விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் அணி தலைவராக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி வந்தது.

 

இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய அணி தலைவராக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05