செய்திகள்
மஹிந்தவின் இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

Feb 13, 2025 - 04:09 PM -

0

மஹிந்தவின் இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

300,000 ரூபா நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

எனினும், மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் தொடர்பான கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே 'அத தெரண'வுக்கு தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05