Feb 13, 2025 - 05:09 PM -
0
நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மயோசிட்டிஸ் நோய்க்கு சிகிச்சை பெற அவர் சினிமாவில் இருந்து சில காலமாக விலகி இருக்கிறார்.
தற்போது மீண்டும் அவர் பிசியாக படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா.
அவர் ஜிம் செல்லும் வீடியோகளும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமந்தா தற்போது ஆட்டோவில் பயணம் செய்து இருக்கிறார்.
ஆட்டோவில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட அது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.