Feb 13, 2025 - 05:43 PM -
0
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கான தெற்கு சூடான் நிலை 2 வைத்தியாசலையில் கடமைகளைப் பொறுப்பேற்க இலங்கை இராணுவ மருத்துவப் படையின் 11ஆவது இராணுவ மருத்துவக் குழு இன்று (13) காலை நாட்டிலிருந்து புறப்பட்டது.
நாட்டிலிருந்து புறப்பட்ட 11ஆவது இராணுவ மருத்துவப் படைக் குழுவில் 16 இராணுவ அதிகாரிகள், இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் உட்பட 64 இராணுவ வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் ஆர்.எம்.டி.பி. ராஜபக்ஷ யு.எஸ்.பீ, இரண்டாவது கட்டளை அதிகாரியாக கே.டி.பி.டி.இ.ஏ. விஜேசிங்கேவும் கடமையாற்றுவர்.
இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே, தொலகே வெளியேறும் 11ஆவது இராணுவ மருத்துவப் படையணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இராணுவ மருத்துவப் படையணி தலைமையக நிலையத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.யு.எஸ். வனசேகர ஆர்.டபிள்யூ.பீ யுஎஸ்பீ, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த குழுவினை வழியனுப்பினர்.