Feb 13, 2025 - 06:04 PM -
0
ஜேர்மனியின் மியூனிக் நகரில் போராட்டக்காரர்கள் இருந்த கூட்டத்திற்குள் வேண்டுமென்றே காரொன்று உட்புகுந்த விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இருப்பினும், சம்பவத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் வௌியாகவில்லை.
விபத்தில் காயமடைந்தவர்களில் தொழிலாளர் சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை, ஆனால் விபத்துக்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் வௌிநாட்டு ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன.
மேலும், காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 24 வயதுடைய ஆப்கானிஸ்தான் அகதி என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த நகரில் உயர்மட்ட பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறவிருந்த நேரத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதோடு, அமெரிக்க துணை ஜனாதிபதி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோரும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.