வடக்கு
தீயுடன் சங்கமானார் இராஜநாயகம் பாரதி

Feb 13, 2025 - 06:04 PM -

0

தீயுடன் சங்கமானார் இராஜநாயகம் பாரதி

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு, இன்று (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

 

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் , திருநெல்வேலியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்றைய தினம் இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி உரைகள் இடம்பெற்று, புகழுடல் தகன கிரியைகளுக்காக மதியம் 1.30 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05