செய்திகள்
2025 வரவு செலவுத்திட்ட இறுதி கட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Feb 13, 2025 - 07:47 PM -

0

2025 வரவு செலவுத்திட்ட இறுதி கட்டம் தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. 

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05