Feb 14, 2025 - 08:51 AM -
0
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடர் கட்டாரின் டோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று (13) நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 2ஆம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், கசகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 7-5 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.