Feb 14, 2025 - 11:11 AM -
0
ரம்புக்கனை, கன்சலகமுவ பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனம் ஒன்று கேகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பதிவு செய்யப்படாத, உறுதிப்படுத்த முடியாத அசெம்பிள் செய்யப்பட்ட கார் ஒன்றுடன் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 50 வயதுடைய ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

