வணிகம்
செரண்டிப் புதுமை மற்றும் புத்தாக்கம் நிறைந்த ‘7 ஸ்டார்’ தயாரிப்புக்களை மீள்வடிவமைக்கப்பட்ட பொதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது

Feb 14, 2025 - 11:32 AM -

0

செரண்டிப் புதுமை மற்றும் புத்தாக்கம் நிறைந்த ‘7 ஸ்டார்’ தயாரிப்புக்களை மீள்வடிவமைக்கப்பட்ட பொதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது

உயர்தரமான தயாரிப்புக்கள் மற்றும் இலங்கையர்களின் சுகாதாரம், நல்வாழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஊட்டச்சத்துமிக்க மாவை வழங்குவதில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை மீள் உறுதிப்படுத்தும் வகையில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தனது பரந்துபட்ட தயாரிப்புக்களுக்குப் புதிய பொதியிடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கம்பனி ஆரம்பிக்கப்பட்டது முதல் இலங்கையின் கோதுமை மா துறையில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் முன்னணியாளராகத் திகழ்ந்து வருகின்றது. புதுமை, தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஒப்பிடமுடியாத அர்ப்பணிப்பு போன்ற விடயங்களால் இலங்கையின் பரந்துபட்ட உணவுக் கட்டமைப்பை மாற்றியமைத்தல் மற்றும் தேசத்தைப் போஷணையூட்டல் என்ற தனது 15 வருட பயணத்தை இந்நிறுவனம் அண்மையில் கொண்டாடியது. 

இலங்கையின் சந்தைக்கு சிறந்த மா வகைகளை அறிமுகப்படுத்திய முதலாவது ஆலை என்ற ரீதியில், அனைத்துத் தேவைகளுக்குமான கோதுமை மா, ரவை, கேக் மா, உடன் அரைத்த ஷக்கி ஆட்டா, முழுகோதுமை மா போன்ற பரந்துபட்ட தயாரிப்புக்களை செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்தப் பரந்துபட்ட தயாரிப்புக்கள் காரணமாக 2012ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் வீட்டு வாடிக்கையாளர்கள் தொடக்கம் வணிக ரீதியான பேக்கரி தயாரிப்பாளர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள் என சகலரின் மத்தியிலும் ‘7 ஸ்டார்’ முதல்தரத் தெரிவாக வியாபித்துள்ளது. 

இந்த வெற்றிப் பயணத்தின் 15 வருடக் கொண்டாட்ட நிகழ்வுகளின் ஓர் அங்கமாக வர்த்தக நாமத்தின் பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், சந்தையின் போக்கைப் பறைசாற்றும் வகையிலும் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட ‘7 ஸ்டார்’ தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன பொதியிடலானது வர்த்தக நாமத்தின் சிறப்பைப் பேணும் அதேநேரம், சில்லறை சந்தையில் தனது பலமான பிரசன்னத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைகின்றது. 

புதுவலுவூட்டும் இந்த அறிமுகத்தின் ஊடாக பேக்கிங் மற்றும் பேக்கரி தயாரிப்புகளுக்கான செரண்டிப் கோதுமை மா ஆலையின் சமகால அணுகுமுறை பிரதிபலிக்கப்படுவதுடன், இன்றைய சந்தையில் தயாரிப்புகளின் மாறிவரும் தன்மைகளுக்கு ஏற்ப, புதுமையான தரம்மிக்க தயாரிப்புக்களை வழங்கும் அர்ப்பணிப்பும் உறுதிசெய்யப்படுகின்றது. 7 ஸ்டாரை தமது விருப்பத் தெரிவாகக் கொண்ட வீட்டுப் பாவனையாளர்கள் மற்றும் வீட்டு பேக்கரி உரிமையாளர்களை இந்தப் புதிய பொதிகள் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையர்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்குத் தேவையான தரமான, ஊட்டச்சத்துமிக்க மாவை வழங்குவது என்ற தனது பிரதான நோக்கத்தில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பது தயாரிப்பு மேம்பாடு மற்றும் பொதியிடல் உத்திகளில் தொடர்ச்சியாகப் புதுமைகளை வழங்குவதன் ஊடாக வெளிப்படுத்தப்படுகிறது. நிறுவனம் தனது 15வருட கால வெற்றிப் பயணத்தைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள நுகர்வோரின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அதற்கான சிறந்த பாரம்பரியத்தையும் உருவாக்கி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05