Feb 14, 2025 - 12:39 PM -
0
தமிழ் சினிமாவில் கடந்த மாதம் வெளியான படங்களில் மிகவும் ஹிட்டான படமாக அமைந்துள்ளது குடும்பஸ்தன்.
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. மிடில் கிளாஸ் வாழ்க்கை பற்றிய ஒரு அருமையான படம்.
தற்போது இந்த படத்தில் பணிபுரிந்த ஒரு பிரபலம் உயிரிழந்துள்ள செய்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
குடும்பஸ்தன் திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் கல்லேரி (56) கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் அநீதி, மத்தகம் உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.