Feb 14, 2025 - 04:52 PM -
0
நடிகர் அஜித்தின் அடுத்த படம் யாருடன் என்பது தான் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. ஏற்கனவே அவர் கார் ரேஸ் மீது கவனம் செலுத்துவதால் அடுத்த படம் இந்த வருடத்தின் இறுதியில் தான் தொடங்கும் என முன்பே அவர் கூறிவிட்டார்.
மேலும் பல முக்கிய இயக்குனர்கள் தற்போது அஜித்துக்கு கதை சொல்லி இருக்கின்றனர்.
தற்போது கார்த்திக் சுப்பாராஜ் அஜித்துக்கு கதை சொல்லி இருப்பதாக கதை வெளியாகி இருக்கிறது.
சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு பிறகு அவர் அஜித்தை இயக்குவதாக தகவல்கள் வருகிறது.
இருப்பினும் இந்த ப்ராஜெக்ட் இன்னும் உறுதியாகவில்லை என்றும் அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.