Feb 14, 2025 - 06:04 PM -
0
பூநகரி பிரதேச அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (14) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் பூநகரி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது, தமது பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற மதுபான சாலைகளை அகற்றுமாறு தெரிவித்து மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
--