சினிமா
8 நாட்களில் விடாமுயற்சி செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Feb 15, 2025 - 07:37 AM -

0

8 நாட்களில் விடாமுயற்சி செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி.

 

லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். அஜித்துடன் மகிழ் திருமேனி முதல் முறையாக இப்படத்தில் இணைந்தார்.

 

இவர்களுடைய கூட்டணி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

 

மக்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்று வரும் விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  

 

அதன்படி, 8 நாட்களில் இப்படம் 141 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05