சினிமா
விபத்தில் சிக்கிய பிக்பாஸ் ஜனனி!

Feb 15, 2025 - 09:39 AM -

0

விபத்தில் சிக்கிய பிக்பாஸ் ஜனனி!

தமிழ் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான ஜனனி பிக் பாஸ் மூலமாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். 

தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. விஜய் உடன் லியோ படத்தில் ஒரு சின்ன ரோலில் ஜனனி நடித்து இருந்தார். 

அதன் பிறகு தற்போது நிழல் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது நிழல் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் ஜனனி காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. 

காலில் பெரிய கட்டுடன் அவர் நடக்க முடியாமல் வந்திருக்கும் வீடியோ தற்போது அனைவரையும் ஷாக் ஆக்கி இருக்கிறது. 

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05