செய்திகள்
Parking Tickets முதல் பத்து நிமிடம் இலவசம்

Feb 15, 2025 - 01:12 PM -

0

Parking Tickets முதல் பத்து நிமிடம் இலவசம்

வாகனம் நிறுத்தப்பட்டவுடன் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணாயக்கார தெரிவித்துள்ளார். 

 

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், வாகனத்தை நிறுத்திய முதல் 10 நிமிடங்கள் இலவசம் என தெரிவித்தார். 

 

மேலும் கருத்து தெரிவித்த பாலித நாணாயக்கார,

 

 " வாகனம் ஒன்றை நிறுத்திய உடனே கட்டணம் வசூலிக்க எந்த சட்டமும் இல்லை. வாகனத்தை நிறுத்திய பிறகு முதல் 10 நிமிடங்கள் இலவசம்." வாகனம் நிறுத்தப்படும் நேரத்தை குறிப்பிட்டு டிக்கெட் ஒன்றை வழங்க முடியும். பத்து நிமிடங்களுக்கு மேல் சென்றால்தான், குறித்த நபரிடம் இருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணம் பெற முடியாது.

 

 "மேலும், போயா நாட்களிலும் சிறப்பு விடுமுறை நாட்களிலும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை."

 

Comments
0

MOST READ
01
02
03
04
05