Feb 16, 2025 - 10:15 AM -
0
இந்தியாவின் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் எவ்வித காயங்களும் இன்றி உயிர்தப்பினார்.
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணி அளவில், பெங்களூரு நோக்கி நடிகர் யோகி பாபு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கடந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானது.
இதில் எந்தவிதமான காயமும் இல்லாமல் யோகி பாபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், வேறு காரை வரவழைத்து அங்கிருந்து சென்றுள்ளார். நெடுஞ்சாலைத்துறை ரோந்து பொலிஸார், நீண்ட நேரம் போராடி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சிக்கிய காரை அப்புறப்படுத்தினர்.
காரில் இருந்த யோகி பாபுவை அங்க கூடியிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர், விபத்தில் சிக்கிய யோகி பாபுவின் வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.