Feb 16, 2025 - 11:13 AM -
0
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் யோகி பாபு. இவர் காமெடியன், கதாநாயகனாக பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென இடத்தை உருவாக்கிக்கொண்டவர். யோகி பாபு தற்போது மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். படங்களில் தொடர்ந்து பிசியாக இருக்கும் யோகி பாபு அவ்வப்போது பிரபலமான ஆன்மிக தலங்களுக்கும் செல்வார்.
இந்த நிலையில், நடிகர் யோகி பாபு பயணம் செய்த கார் இன்று (16) அதிகாலை விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருந்த வீதித்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, நான் வீதி விபத்தில் சிக்கவில்லை நலமுடன் இருக்கிறேன் என்று யோகி பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.