Header Logo

கிழக்கு
போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன், சாணக்கியன், கோடீஸ்வரன்

Feb 16, 2025 - 01:12 PM -

0

போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன், சாணக்கியன், கோடீஸ்வரன்

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.

இன்று (16) அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதிக்கு இன்றைய தினம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இதன்போது குறித்த பகுதியில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மதுபான நிலையத்தினை மூட நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.

குறித்த மதுபான நிலையம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றிணை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் உறுதியளித்தார்.

இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதந்தபோது சிலர் இங்கு அரசியல்வாதிகள் தேவையில்லையென சிலர் முரண்பட்டநிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title