விளையாட்டு
பாகிஸ்தான் அணிக்கு கடுமையான மெசேஜ்

Feb 16, 2025 - 01:23 PM -

0

பாகிஸ்தான் அணிக்கு கடுமையான மெசேஜ்

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது. பாகிஸ்தான் பல்வேறு தடைகளை கடந்து இந்த தொடரை நடைபெற இருக்கிறது.

 

முதலில் இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தானில் இருந்து தொடர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், நாங்கள்தான் தொடரை நடத்துவோம் என பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

 

அதன்பிறகு போட்டி நடைபெற இருக்கும் மைதானங்களை சீரமைக்கும் பணி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவடைய வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது. அந்த தடையையும் கடந்து வந்துள்ளது.

 

லாகூர் கராச்சி மைதானத்தில் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா உடனான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தியது.

 

இந்த நிலையில் வருகிற 19 ஆம் திகதி பாகிஸ்தான் தொடக்க போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ஆனால் இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடும். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை பல வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் பார்வையிடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளதால், பாகிஸ்தான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

அத்துடன் இந்திய அணிக்கெதிராக கோபமாக உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஒரு கடுமையாக தகவலை தெரிவித்துள்ளார்.

 

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடியும் வரை இந்திய அணி வீரர்கள் உடனான நட்பை புறந்தள்ளி வைக்கவும். மேலும், விராட் கோலி மற்றும் இந்திய அணி வீரர்களை கட்டி பிடிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05