Feb 16, 2025 - 01:26 PM -
0
நுகேகொடை, தெல்கந்த பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் வணிக மையத்திலிருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபானத் தொகையை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கார் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படும் வணிக மையத்தின் தரை தளத்தில் உள்ள கார் உதிரி பாகங்களுக்கு இடையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபானத்தை குறித்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதன்படி, அதன் முகாமையாளராக இருந்த 59 வயதுடைய ஒருவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன்றன.

