சினிமா
சிவகார்த்திகேயன் உடைத்த ரகசியம்

Feb 16, 2025 - 03:07 PM -

0

சிவகார்த்திகேயன் உடைத்த ரகசியம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் வசூல் திரைப்படமாக அமரன் மாறியுள்ளது.

 

இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

 

உடைத்த ரகசியம்,

 

இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

அதில், 'எனக்கு சரியாக சம்பளம் வந்து விட்டது. அதுவே, மிகவும் ஆச்சரியமாக உள்ளது. படம் வெளியாவதற்கு 6 மாதங்கள் முன்பே முழுசம்பளத்தையும் கொடுத்து, அதை தாண்டி மரியாதையும் தெளிவாக கொடுத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை பார்ப்பதே மிகவும் அரிதான விஷயம்' என்று கூறியுள்ளார்.  

Comments
0

MOST READ
01
02
03
04
05