Feb 16, 2025 - 03:57 PM -
0
மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுக்களையும் சம்பந்தப்பட்ட படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இராணுவத் தலைமையகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிர்வாக விடயம் தொடர்பாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
இருப்பினும், தனிப்பட்ட தேவைகளுக்காக தொடர்புடைய பிரிவுகளுக்கு அறிவிப்பதன் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை மீண்டும் பெற முடியும் என்றும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

