உலகம்
48 பெண்கள் பரிதாபமாக பலி!

Feb 16, 2025 - 05:21 PM -

0

48 பெண்கள் பரிதாபமாக பலி!

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், பெண்கள் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கென்யா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

இந்த விபத்தில் சிக்கி, பெண்கள் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

 

கடந்த ஜனவரி 29 ஆம் திகதி, கங்காபா மாவட்டம் கூலிகோரோ பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05