Feb 16, 2025 - 05:39 PM -
0
தெஹியோவிட்ட பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்ற கார்னிவல் நிகழ்வின் போது ஏற்பட்ட விபத்தில் 11 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
ஊஞ்சலில் இருந்த உட்காரும் கூடாரம் ஒன்று சரிந்து விழுந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவிழ்ந்த கூடாரத்துக்குள் இருந்த 51 வயதுடைய ஒருவரும் 11 வயது சிறுவனும் விபத்தில் காயமடைந்து அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

