செய்திகள்
யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்!

Feb 16, 2025 - 09:23 PM -

0

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் இணைந்து யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை இன்றையதினம் (16) பார்வையிட்டனர். 

இதன்போது துரையப்பா விளையாட்டு அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர். குறிப்பாக ஒளியமைப்பு வசதிகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்கு அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்ததோடு இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்கித் தருமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அரச அதிபரிடம் கேட்டுக்கொண்டார். 

மேலும், வேலனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார். 

இந்நிகழ்வில் வேலனை பிரதேச செயலாளர் க.சிவகரனும் கலந்து கொண்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05