Feb 17, 2025 - 08:31 AM -
0
இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உட்கட்டமைப்புச் செய்வதற்கு பங்களிப்பதற்காக, அத்தியாவசியமான டிஜிட்டல் அறிவு மற்றும் திறன்களை வழங்கி இலங்கை மக்களுக்கு வலுவூட்டும் முகமாக ஹட்ச் நிறுவனம், Trainocate நிறுவனத்துடன் இணைந்து, Srilankanization என்ற பேராவல் மிக்க செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
மைக்ரோசொப்ட், AWS, Google Cloud, மற்றும் Cisco உள்ளிட்ட உச்ச தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து, சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக, மாணவர்கள், தொழில்முயற்சியாளர்கள், தொழில் சார்ந்தவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு டிஜிட்டல் பயன்பாடுகள் குறித்த உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கற்கைநெறிகளை Srilankanization முயற்சி வழங்குகின்றது. பிரஜைகளை முன்னேற்றி, தெற்காசியாவில் டிஜிட்டல் துறையில் முன்னோடியாக இலங்கையை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.
Srilankanization முயற்சியினூடாக, பல்வகைப்பட்ட கற்றல் மூலங்கள் வழங்கப்படுவதுடன், ஹட்ச் இணையத்தளத்தில் (www.hutch.lk/srilankanization) இடம்பெற்றுள்ள “RESET” இலத்திரனியல் வழி கற்றல் (e-learning) தளத்தினூடாக இதனை அணுக முடியும். 5,000 க்கும் மேற்பட்ட பயிற்சி காணொளிகள் மற்றும் பல்வகைப்பட்ட டிஜிட்டல் துறைகளில் 130 க்கும் மேற்பட்ட சான்றிதழ் அங்கீகாரங்களையும் வழங்கும் ஒரு புத்தாக்கமான தளமாக RESET காணப்படுகின்றது.
வருடத்திற்கு வெறும் ரூபா 7,500 என்ற மானிய கட்டணத்துடன் எவரும் இத்தளத்தில் இணைந்து கொள்ள முடியும். இவ்வாறு கட்டணம் செலுத்தி இணைந்து கொள்ளும் போது, ஆண்டு முழுவதும் இத்தளத்தில் கிடைக்கும் அனைத்து கற்கைநெறிகளையும் வரையரையின்றி அணுக முடிவதுடன், நெகிழ்வுத்திறன் கொண்ட மற்றும் விரிவான கற்றல் அனுபவத்திற்கு இடமளிக்கின்றது.
இதன் உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் கூட்டாளராக இணைந்துள்ள ஹட்ச், டிஜிட்டல் மேம்பாட்டுக்கு இடமளிக்கும் தனது வகிபாகத்தையும், சிந்தனைச் சிற்பி என்பதையும் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. Trainocate உடனான ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற இம்முயற்சி, நவீன பணிக் கருவிகள், மென்பொருள் பிரயோகங்கள், மேகக் கணினி (cloud computing), இணையப் பாதுகாப்பு (cybersecurity), தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற மிகவும் கேள்வி மிக்க துறைகளில் கட்டுபடியான மற்றும் அணுகக்கூடிய, அத்தியாவசிய தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் அங்கீகாரங்களை கிடைக்கச் செய்வதில் கவனம் செலுத்துகின்றது. சர்வதேச தராதரங்களுக்கு ஈடாக, வலுவான உள்ளூர் வல்லுனர் குழாமொன்றை விருத்தி செய்து, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து மற்றும் சர்வதேச தொழில்நுட்ப அரங்கில் இலங்கையின் ஸ்தானத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் பெப்ரவரி 4 ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட Srilankanization நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தகுதியான நபர்களுக்கு ஹட்ச் மற்றும் Trainocate ஆகியன கூட்டாக இணைந்து, 77 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
இம்முயற்சி குறித்து ஹட்ச் Sri Lanka நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தி, மற்றும் டிஜிட்டல் பரிமாண மாற்றத்தில் முக்கிய உந்துசக்தியாக எமது வகிபாகத்தை வலுப்படுத்தும் ஒரூ மூலோபாய நகர்வாக ‘Srilankanization’ தொடர்பில் Trainocate உடனான எமது ஒத்துழைப்பு மாறியுள்ளது. டிஜிட்டல் துறையில் பல்வேறுபட்ட பிரிவுகள் தொடர்பான அடிப்படை மற்றும் மேம்பட்ட திறன்களை இலங்கை மக்கள் மத்தியில் வளர்த்து, வல்லுனர் வெளியேற்றம் மற்றும் தொழிற்படை தொடர்பான பற்றாக்குறை போன்ற சவால்களைக் கையாள்வதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம். சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை சிக்கனமான வழியில் பரவலாக அனைவரும் பெற்றுக்கொள்ள வழிவகுப்பதனூடாக, உள்ளூர் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களித்து, சர்வதேச டிஜிட்டல் பொருளாதாரத்தில் வெற்றி காண்பதற்குத் தேவையான திறன்களை வழங்கி, இலங்கை மக்களை நாம் வலுவூட்டுகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
Trainocate SEANM & Gulf முகாமைத்துவப் பணிப்பாளர் ஸஃபருல்லா ஹஷிம் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச தொழில்நுட்ப மையமாக இலங்கையை மாற்றுவதற்கு பங்களிக்கவல்ல, டிஜிட்டல் அறிவுமிக்க தொழிற்படையை விருத்தி செய்வதை நோக்கிய தூரநோக்குடனான ஒரு படியாக Srilankanization முயற்சி அமைந்துள்ளது. RESET தளத்தின் ஒருங்கிணைப்பினூடாக, நடைமுறைக்கு அமைவான, தொழிற்துறைக்கு பொருத்தமான திறன்களை நபர்களுக்கு வழங்குகின்ற விரிவான கற்றல் அனுபவத்தை நாம் வழங்குகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
தேசத்தில் Srilankanization முயற்சி ஏற்படுத்தவுள்ள நற்பயன் குறிக்க பிரத்தியேகமான தகவல் விபரங்களுக்கு www.hutch.lk/srilankanization/ மூலமாக மாற்றத்திற்கான இப்பயணத்துடன் தொடர்ந்தும் இணைப்பில் இருங்கள்.
ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள்
ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுவதுடன், தொலைதொடர்பாடல் உள்ளடங்கலாக ஆறு பாரிய துறைகளில் செயல்பட்டுவருவதுடன், 2023 ம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது.
1997 ம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், 2004 ம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது. 2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் அபிலாஷைகளை அடைவதற்கு உதவும் வகையில் 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளது. சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் வகையில் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கி, தனது சேவைகளை ஹட்ச் விரிவுபடுத்தி வருகின்றது.

