Feb 17, 2025 - 10:18 AM -
0
கந்தகெடிய-போபிடிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் இன்று (17) காலை தனியார் பேருந்து மற்றும் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த வேனில் பயணித்த யுவதிகள் 8 பேர் உட்பட 12 பேர் கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், இவர்களில் 7 பேருக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தகெடிய, வெவேதென்ன, போபிடிய மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசித்துவரும் கந்தகெடிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
குறுகிய வீதியின் வளைவுப் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து கந்தகெடிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

