செய்திகள்
தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு அரசாங்கம் வழங்கும் உணவுப் பொதி

Feb 17, 2025 - 03:26 PM -

0

தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு அரசாங்கம் வழங்கும் உணவுப் பொதி

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும்.

 

 இன்று (17) வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிக்கையில், புத்தாண்டு காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அரிசி, ரின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுப் பொதியை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

 

 இந்தப் பொதியை வழங்குவதற்கான செலவுக்காக வரவு செலவுத் திட்டத்திலிருந்து 1,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05